ஞாயிறு, 23 நவம்பர், 2014



                                                                                ஆயிஸா
ஆயிஸா அற்பத்தனத்தில் பூத்த அர்தமற்ற மலர் அறிவியலாய் அரும்பிய அதிசிய அரும்பு மலர்களையே ரசிக்கத் தெரியாத அவசர உலகத்தில் அரும்புகளை யார் கவனிப்பது என்று தோன்றாலாம் ஆம் இது அவசர உலகம் தான் இந்த உலகத்தை இவ்வளவு அறுசமாய் மாற்றிய இந்த் உலகமயமாக்கச் சூழலுக்கு அறிவியல் எவ்வளவு பயன்னளித்துள்ளது என்பதை இயந்தரமயமான இன்றைய வாழகையை இயக்கும் இயந்தரங்களை கண்டுபிடித்தவர்களின் வாழ்கை முழ்மையாக அதற்கு அற்பனித்துதான் கண்டுடித்தவர்களின் வாழ்க்கை முழ்மையாக அதற்கு அற்பனித்துதான் கண்டுபிடித்துள்ளானர் ஆனால் யார்,யார் எல்லாம் ஆராய்து கண்டுபிடித்தார்களோ அவர்கள் கண்டுபிடித்த அறிவியலின் வேகம் கண்டுபிடித்தவர்களை பாடபுத்தகத்தில் வைத்துவிட்டு ஒரு மார்க்கு இரண்டு மார்க்கு கேள்விகளுக்கான பதிலாக அவர்களின் பெயர் இருக்கவேண்டும் என கோறுகிறது ஆகவே! இங்கு மாணவர்களுக்கு மட்டும் இது பொருந்துவது இல்லை ஆசிரியர்களுக்கும் பொருத்தமே! அறிவியல் பட்டம்பெற்றவர்கள் யாரும் அறிவியலார்களோ அல்லது அவர்களின் வாழ்கைமுறையிலோ நடைமுறையிலோ எந்த தொடர்பும் இருப்பதில்லை…
இது அறிவியல் துறைக்கும் மட்டும் அல்ல இந்த தொடர்பற்ற வாழ்க்கைமுறையில் ஒட்டு மொத்த சமூக அமைப்பும் தனக்கும் இந்த சமூக எந்த தொடர்பும் அற்றே வளர்கிறது. படிக்கின்ற படிப்பிற்கும் வேளைக்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை இதை பற்றி எந்த கவலையும் இன்றி மிகவும் இயல்பாய் எதிர்வினை இன்றி செயல்படுகிறது இந்த இனைய சமூகம் இப்படி தனது நலமோ, அல்லது ஒரு சமுக நலமோ, நாட்டின் நலமோ இல்லாத காலகட்டத்தில் தான் தனது சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்து நடராஜன் பேனவின் மையிலிந்து அயிஸா உயிர் பெறுகிறாள்.
அவள் இந்த நவின உலகம் கோருகின்ற நடை உடை பாவனை கொண்டவள் அல்ல ஆனால் அவள் எளுப்படும் ஒவ்வொரு கேள்வியும் இந்த தொடர்பற்ற வாழ்கை முறையின் அறிவை அள்ளி நகையாடுகிறது வாழ்கை முறை,கற்றல் குறித்து அது சார்ந்துள்ள அறிவியல் குறித்தும் துளியும் அச்சம் இன்றி கேள்விக்குள்ளாகின்றாள் ஆகவே நடராஜன் எத்தனை நூல்கள் எழுதினாலும் அவர் ஆயிஸாநடராஜன் என நடராஜனின் இன்சியலாக ஒட்டிக்கொள்கிறார். ஆகவே இந்த நூலை பல தளங்களில் மாணவர்களுக்கு அறிமுகபடுத்தியுள்ளோம் பல விவாதங்களையும் நடத்தியுள்ளோம் ஆயிஸா எந்த துறைக்கும் பொருந்தி போகிறாள். ஆகவே இன்று ஹோமியோபதி மாணாவியாக இருந்தாள் என்ன செய்வாள் என்பது இங்கு எங்களின் கேள்வி ஆயிஸாவைன் வாசிப்பது உங்களது விருப்புகளுக்கு அப்பட்ட மாணவகளாகிய உங்களின் தார்மிககடமையாகும்!.
ஆனால் மருத்துவர் சாமுவேல் ஹைமனின் தனது மரண படுககையில் படுத்து கொண்டு இந்த மனித குளத்திற்கு என்னால் முடிந்தவற்றையேல்லாம் செய்துவிட்டேன் நான் விட்டுச்சென்ற பனியை ஹொமியோபதியர்களாகிய நீங்கள் தொடர வெண்டும் என்று மகிழ்ச்சியுடன் உயிர் நீர்த்தார்!!!.
ஆயிஸாவோ ஏன் நாம் சமூக அமைப்பு முறையில் இருந்து ஒரு பெண் அறிவாளியும் வரமுடியவில்லை என்று இறுதியாக ஒரு கேள்வி எலுப்பி அதற்க்கு மட்டும் விடையளிக்காமல் உயிர் விடுகிறாள்!.
அந்த கேள்விக்கு பதில் சொல்லும் கடமையும்,பொறுப்பும் ஹோமியோபதி மாணவர்களின் பொருப்பிள் விடுகிறோம்!
நூல் கிடைக்கும் இடம் சாரதா ஒமியோபதி கிளினிக், திருமங்கலம்.மதுரை.

வெள்ளி, 31 அக்டோபர், 2014


ஒல்லி ஒல்லி உடம்பே…..

விதவிதமான உணவுகள், வாயில் நுழையாத பெயர்கள், அவற்றை சாப்பிட்டால் மட்டுமே, நீங்கள் வழ்கையில் உயர்ந்த தராதரம் கொண்டதாக விளம்பரங்கள், இதில் ஆண்,பெண்,குழந்தைகள் என்ற அனைவரும் சாப்பிடலாம் இதில் சில வருடங்கள் கழித்து உங்களது எடை குறைய வேண்டுமா? நீங்கள் உணவு கட்டுப்பாடு இருக்க வேண்டாம்.ஆனால் ஒரே மாதத்தில் உங்கள் எடை குறைந்து விடும். இதனால் மக்களும் தங்கள் எடையை குறைக்க முயற்ச்சிப்பார்கள்.

இந்த எடை குறைவு பொருட்களின் கம்பெனிகள் எப்படி வாடிக்கையளர்களை பிடிக்கிறார் என்றால், உங்கள் உடம்பில் கொளுப்பு எவ்வளவு உள்ளது என்று நாங்கள் இலவசமாக பரிசோதிக்கிறோம் என்று உடம்பில் உள்ள கொளுப்பின் அளவு சொல்லுகிறார்கள். இதோ டு இப்படியே விட்டால் நுரையீரல், இருதயம், பாதிக்கும் என பயமுறுத்துகின்றன.

இதற்கு மேல் REALITY SHOW,ஓல்லி பெல்லி நிகழ்ச்சி, இதிலும் லாப நோக்கம் இப்படி தொடர்ச்சியன நிகழ்ச்சியாகவே இருக்கிறது. இங்கே வியர்வை மூலம் எப்படி நமது எடை குறைகிறது என்று பார்ப்போம்.     நுரையிரல்கலில் இருந்தும் சருமத்திலிருந்தும் தண்ணீர் ஆவியாதல் சுற்றியுள்ள ஆகாய வெப்பம் 40சி-50சி ஆக இருந்தாலும் நமது உடல் வெப்பம் 37சிக்கு பேணப்படுகிறது.
ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது வியர்வை மிகவும் மெதுவாக ஆவியாகிறது, பெரிய துளிகளாக வழிவதன் மூலம் எந்த பயனும் இல்லை  ஏனெனில் அவியாகமல் குளிர்ச்சிகிடையாது இதனால்தான் புழுக்கமான வெப்பமண்டல காடுகளில் உள்ளதைவிட உலர்பாலைவனங்களில் வெப்பத்தை தாங்க முடிகிறது.
         மனித உடல் எடையில் நீரின் பங்குமனித உடல் எடை நிரந்தரமாக வேறுபட்டுக்கொண்டே இருக்கும், திடீரென்று எடை அதிகரிக்கும் காரணமாக உணவுகள் தவிர பல அம்சங்கள் எடையை நிதானமாகவும்,அதிகரிக்கவும்,குறைக்கவும் செய்கின்றன.

சண்டோரியோ சாங்க்டோரியஸ்(1561-1639)

இதை முதலில் கண்டறிந்தவர் 300ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஒரு இத்தாலிய டாக்டர்.சண்டோரியோ சாங்க்டோரியஸ்(1561-1639) இவர் கலிலியோ கல்லூரியின் பேராசிரியர், இவர் இதற்காக பலமணி நேரங்களை தனது மாறுபடும் எடையை ஆராய்ந்தார். அவருடைய ஆரய்ச்சி முடிவில் ஒரு இரவில் அவர் 1(கி.கி) வரை எடை இழந்தார். 

24மணி நேரத்தில் வெளியாகும் காரியஅமில வாயு மூலம் 70-80(கி.கி) வரை எடை இழக்க முடியும். 24மணி நேரத்தில் நுரையீரல் மூலம் 150-500கி வரை குறையும்.வியர்வையின் மூலமான எடை இழப்பு மிகவும் அதிகம்பெருந்துளிகளாக இல்லாமல் போனால் கூட ஒரு மனிதன் எப்போதும் வியர்த்துக் கொண்டே இருக்கிறான்.

அதாவது தோலின் மேற்புறத்தில் பரவிக்கிடக்கும் எண்ணிலங்கா வியர்வைச்சுரப்பிகள் மூலம் மிக நுண்ணிய துளிகள் (உருப்பெருக்கியின் மூலமே காணமுடியும்) இருந்து கொண்டிருக்கும்.


காற்று உலர்ந்தாக இருந்தால் வியர்வை வெளிப்படும் முன் ஆவியாகிறது. அதனால் தோல் உலர்ந்து காணப்படுகிறது. குளிர்ந்த வானனிலையின் போது 250-1700கி வரை தண்ணீர் வியர்வையின் மூலம் வெளியேறுகிறது உலர்ந்த வெப்பமான நிலையின் போது கடின உழைப்பாழி உடலில் 10-15 லிட் வியர்வை வெளியேறுகிறது.
வியர்வையின் பணி;
           மனிதனின் உடலில் வெப்பநிலை வியர்வையின் மூலமே சமநிலை அடைகிறது. ஒரு லிட்டர் வியர்வைக்கு 600 கலோரிகல் என்ற அளவில் உஸ்ணம் ஆவியாகும் போது பயன்படுத்துகிறது.
.அதிகமாக வியர்த்து தாங்க முடியாத அளவில் தாகம் ஏற்படுகிறது. இதை உடனுக்குடன் தண்ணீரை குடித்து சரி செய்ய வெண்டும் இல்லாவிடில் உயிரை பாதிக்கும்.

வியர்வையில் உள்ள தண்ணீர் எங்கிருந்து வருகிறது மனிதன் அருந்தும் தண்ணீர் எங்கு சேகரிக்கப்படுகிறது. மனிதனின் வியர்வை சுரப்பியில் இருக்கும். இரத்தத்திலிருந்து பெறப்படுகிறது. அதிகமான வியர்வை உண்டாகாதவரை  இரத்தம் பருமனாமடைவதில்லை பரிணாமமும் குறைவதில்லை,

இரத்தத்திலிருந்து தண்ணீரின் அளவு குறையும் போது சேமிப்புகளில் (தண்ணீர், தசை, திசு, பல உறுப்புகள்) இதனால் உடல் பருமன் உள்ளவர்களை வியர்வை வழிய உடல்பயிற்சிகளையும், மேற்கொள்ளச் சொல்கிறோம் இதனால் கொளுப்புகல் கரைக்கப்படுகின்றன 

ஒருவர் ஒல்லியாவதும் குண்டாவதும் கார்ப்ரேட் நிறுவனங்களின் கவளையொன்றும் கிடையாது கையில் இருக்கும் பணத்தை பரிக்கும் ஒரு வர்த்தக் யுத்தியே இதை புரிந்துகொள்ளாத யாரும் முதளாளித்துவ நிருவனமயம் ஆக்கபட்டிருக்கும் சந்தை கலச்சார வலைபின்னலில் இருந்து தப்ப முடியாது….


கிராமத்து வாழ்க்கையில் இப்பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை நகரத்து மேச்சலில் தான் சிக்கல், ஆகையால் குண்டாகத்தான் பணம் தேவையேஒலிய, ஒல்லியாக தேவையில்லை, காசுக்காக தன்னை எந்த விலைக்கும் விற்று கொள்ளும் சந்தை பன்பாட்டில் எது மருத்துவம்? யார் மருத்துவர்? என்பதை தேடுவோம் இத்தேடல் நிச்சயமாக எடை இழக்கச்செய்யும்….
 கட்டுரையாளர்                                        மருத்துவர்

  கல்பனா           

வியாழன், 30 அக்டோபர், 2014

நீர்
தாயைப்பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்பது நம் பழமொழி இதன் பின் உள்ள ரகசியத்தை எப்படி அறிந்தார்கள் நம்முன்னோர்கள் என்பது நீரினுள் நம் மூழ்கி பார்த்தால் தெரியும் என நினைத்தோம்.(அ) நீரின்றி அமையாது இவ்வுலகம் என திருவள்ளுவர் வாக்கிற்கினங்க.                            பருவமழை தொடர்ந்து பொய்க்கிறது நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது பெண்கள் தண்ணீர்க்கு குடம் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள் இதற்கு எல்லம் என்ன காரணம் என்று தெரியாமலே தண்ணீரின் தன்மை குறித்து ஆய்வு செய்தோம் அம்முயற்சியின் விளைவாக கிடைத்த தகவல்களை சேகரித்து விவாதிக்க ஆரம்பித்தோம் அதன் பயணாக நீரின் மீது அளவில்ளா பற்றுதலை ஏற்படுத்தியது , பற்றிக்கொண்ட கருத்துகளை கட்டுரைகளாக படைத்திருக்கிறோம்.இது வாசிப்பதற்கு மட்டும்மல்ல விவாதத்திற்கும்மே.                                                                               உயிப்புற்ப்புள்ள தண்ணீர்
அதென்ன உயிர்ப்புள்ள தண்ணீர் , தண்ணீர் உரையும் போது உய்ர்ப்புபடைகிறது எப்படி?
தண்ணீரை சூடுபடுத்தினால் வெப்ப அசைவு துரிதமாக இருப்பதால் மூலக்கூறுகள் வேகமாக நகர தொடங்குகின்றன போதிய இடம் இல்லதால் ஒன்றுடன் ஒன்று வேகமாக  மோதுகின்றன. (திடப் பொருள் விரிவடையும்) தண்ணீர் வேறு விதமாக வினை புரிகிரது நீரீண் வெப்பம் குறையும் போது வெப்ப அளவு மந்தம் அடைவதால் மின் காந்த ஆற்றலின் மூலம் நீரின் மூலக்கூறுகள் இணைப்பை உருவாக்குகின்றன.
 நீரின் மூலக்கூறும் மற்ற நான்கு மூலக்கூறுகள் இணைந்து படிக பின்னல் கட்டியாக மாறுகிறது. இதனால் நீரின் ஒரு மூலக்கூறில் ஒரு பெரிய துளை காணப்படுகிறது. வெப்பம் அதிகரிக்கும் போது வெப்ப அசைவு துரிதமாக இணைப்புகள் உடைந்து பனிக்கட்டி உடைகிறது. உருகிய பனிக்கட்டியிலிருந்து நீண்ட நேரத்திற்கு பனிக்கட்டி தன்மையாக கொண்டுள்ளது.இதை 30சி மேல் சுடேற்றினால் மட்டும் உருகாது 40சி மேல் சுடேற்றினால் மட்டும் உருகும் 

பனிக்கட்டியிலிருந்து பெறப்பட்ட தண்ணீர் பல எண்ணிலடங்காத பனித்துண்டுகள் மிதக்கின்றன. இந்த மிதக்கும் பனிக்கட்டிகள். உயிர்னங்களுடன் பிரதி வினை புரிகின்றன. எங்கு பனிக்கட்டி உருகுகிறதோ அங்கு நுண்கிருமிகள் துரிதமாக அதிகரிக்கின்றன. பல விலங்குகளின் குட்டிகள் பூச்சிகளின் முட்டை புளுக்கள் மிகுதியான குளிர்ச்சியிளே துரிதமாக வளர்கின்றன.
பனிக்கட்டியையோ அல்லது உருகிய பனிக்கட்டியின் தண்ணீரை அருந்திய இளம் உயிரினங்கள் விலங்குகள் துரிதமாக வளர்ச்சியடைகின்றன. இவற்றிற்கு நோய் எதிர்பு திறனும் அதிகமாக உள்ளது. பெரும்பாலான விலங்குகள் இள வேனிற்க்காலங்களில் இனப்பெருக்கம் செய்வதும் பறவைகள் வலசை போவதும் அப்படியே இதற்கு காரணம் குளிச்சி பனிக்கட்டி பனிக்கட்டியிலிருந்து உருகியதண்ணீர் உயிரிணங்களில் உள்ள நீர் எல்லமே மிதக்கும் பனிக்கட்டிகளாகவே இருக்கின்றன.
 செல்களின் புரோட்டோ பிளாசத்திலும் செல்லிடைத்திரவங்களிலும் பல மிதக்கும் பனிக்கட்டிகல் இருக்கிறன. புரதம் கொளுப்பு மாவுப்பொருள்கள் போன்றவற்றின் மூலக்கூறுகள் பனிக்கட்டியின் அமைப்பில் பொருந்துகின்றன. எனவே இவை படிக கிராதி துளைக்குள் எளிதில் நுழைய முடியும் எனவே தண்ணீர் உறையும் போது இவைகள் சேதமடைவதில்லை பனிக்கட்டியின் அமைப்போடு பொருந்தாத வடிவம் கொண்ட மூலக்கூறுகள் தண்ணீர் உறையும் போது வெளியேற்றப்படுகிறது எனவேதான் ஆர்ட்டிக் பனிக்கட்டில் உப்பு இருக்காது.
உயிரினம் மூப்படைவதற்கு காரணம் சிதைந்த மூலக்கூறுகள் பலவற்றை சேகரித்து குவிப்பதால், இவற்றிக்கு பனிக்கட்டிகளின் உருகிய தண்ணீரை கொடுத்தால் செல்கள் புத்தூக்கம் பெறுகின்றன. சுடு தண்ணீர் குடிக்கலாமா?
டாக்டர் நான் எப்போதும் தண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கிறேன் என்று பலரும் சொல்வதுண்டு. இது உடம்புக்கு ஆரோக்கியமானதா என்றால் நிச்சயமாக இல்லை அதிகமான வெப்பத்தில் பனிக்கட்டியில் படிக கிராதி தட்டி முழுமையாக உடையாது’ பல புதிய இணைப்புகளை பிளக்க வேண்டும். அது அவ்வுளவு எளிதல்ல. ஏனெனில் அது 0சி உறையாது -7சி கீழே இருந்தால் மட்டுமே உறையும் 0சி க்கு குறைவான வெப்பத்தில் உறையாத தண்ணீர் மிகையாக குளிர்ந்து விட்டது எனக் கொள்ள வேண்டும் உயிரினத்தில் மிகையாக குளிர்ந்த நீராக இருப்பது வளர்சிதை மாற்றத்தில் தீய விளை பொருள்கள் திரள ஊக்குவிக்கும்’.
 ஆம் ஏதோ புரியாத மொழி அல்ல இது நாம் அன்றாட எனக்குளளும் இந்த உலக உயிரிங்களுக்குள்ளும் நடக்கும் வளர்சிதையின் ஒரு அங்கமே ஆனால் இந்த நீர் குறித்த விவாதாம் வாழ்க்கை குறித்த அச்சத்தை உணர்த்துகிறது நீர் குறித்த அரசியலோ நீர் குறித்த நம் அறியாமையை பறைசாட்டுகிறது….
கட்டுரையாளார் மருத்துவர்
 கல்பனா


புதன், 29 அக்டோபர், 2014

பெப்ஸி தலைமுறை


886 இல் அறிமுகமான கோகோகோலாவின் வெற்றி, அதேபோல் கஷாயங்கள் தயாரிக்கும் ஆசையைப் பலர் மனங்களில் தூண்டிவிட்டது. அமெரிக்காவின் வடக்குக் கரோலினா பகுதியில் காலெப் பிராட்ஹாம் என்னும் மருத்துவர் இருந்தார். பல சோதனைகள் செய்து, 1893 இல், பிராட்ஸ் டிரிங்க் (Brad’s Drink) என்று தன் பெயர் கொண்ட பானத்தை அறிமுகம் செய்தார்.
வயிற்று வலி மருந்து
ஜான் பெம்பர்ட்டன், கோகோ கோலாவை, தலைவலிகள், நரம்பு வலி, நரம்புத் தளர்ச்சி, மனச் சோர்வு ஆகியவற்றுக்கு மருந்தாக விற்பனை செய்தார். கோகோ கோலாவிடமிருந்து வித்தியாசம் காட்டவேண்டுமே? பிராட்ஹாம் வயிற்று வலி மருந்தாக விற்பனை செய்தார். ஐந்து வருடக் கடும் முயற்சி. பானம் மக்களிடம் எடுபடவில்லை. கோகோ கோலா பாணியில், 1898 இல் தன் பானத்தின் பெயரைப் பெப்ஸி கோலா என்று மாற்றினார்.
பெப்ஸின் (Pepsin) என்பது, நம் உடலின் இரைப்பை நீரில் உள்ள ஒரு Enzyme. நம் ஜீரண சக்திக்கு பெப்ஸின் தேவை. பிராட்ஹாமின் பானத்தில், பெப்ஸின் கிடையாது, பானத்துக்கும் பெப்ஸினுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஆனால், தன் கண்டுபிடிப்பை வயிற்று வலி மருந்தாக விற்க முடிவு செய்ததால், ஜீரணத் தொடர்பான பெப்ஸினைப் பெயரில் சேர்த்தார்.
அடுத்த முப்பது வருடங்கள் பெப்ஸி கோலாவுக்குச் சோதனை நாட்கள். 1923, 1931, 1933 ஆகிய மூன்று வருடங்களும், கம்பெனி திவாலாகியது. புதிய முதலாளிகளின் கையில் புனர்ஜென்மம் எடுத்தது. 1939 இல் ஒரு திருப்புமுனை வந்தது.
புதிய உத்தி
1929 முதல் 1942 வரை, அமெரிக்காவின் பொருளாதாரத்தில் இருண்ட காலம். மாபெரும் பொருளாதார வீழ்ச்சி (Great Depression) என வரலாறு வர்ணிக்கும் காலகட்டம். ஆயிரக் கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
லட்சக்கணக்கானோர் வேலை இழந்தார்கள். பணக்கார அமெரிக்காவில், பஞ்சம், பசி, பட்டினி. ஆச்சரியமாக, நாடே திண்டாடும்போது. பெப்ஸி வளர்ந்தது. இதற்குக் காரணம், அவர்கள் வகுத்த மார்க்கெட்டிங் யுக்தி. ஆறரை அவுன்ஸ் கொண்ட பாட்டில்களில் கோகோ கோலா விற்பனையாகிக்கொண்டிருந்தது. ஒரு பாட்டில் விலை ஒரு நிக்கல் (ஒரு டாலருக்கு 20 நிக்கல்கள்). அதே ஒரு நிக்கலுக்கு, 12 அவுன்ஸ் பாட்டிலைப் பெப்ஸி அறிமுகம் செய்தது.
அமெரிக்க மக்கள் பொரு ளாதார வீழ்ச்சியிலிருந்து எழுந்து வந்துகொண்டிருந்தார்கள். ஒவ் வொரு செலவையும் கண்களில் எண்ணெய் ஊற்றிக் கவனித்தார் கள். கோகோ கோலாவின் பாதி விலையில் பெப்ஸி கிடைத்ததால், ஏராளமானவர்கள் கோகோ கோலா விலிருந்து பெப்ஸிக்கு மாறி னார்கள்.
முதல் வெற்றி
விலை குறைக்கவேண்டிய அவசியம் கோகோ கோலாவுக்குத் தெரிந்தது. ஆனால், எதுவும் செய்யமுடியாத நிலை. அப்போது கோகோ கோலா கண்ணாடி பாட்டில்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. கம்பெனியின் முக்கிய முதலீடு பாட்டில்கள்தாம். ஆறரை அவுன்ஸ் பாட்டில்களை மாற்றி, 12 அவுன்ஸ் பாட்டில்கள் அறிமுகம் செய்ய, கோடிக் கணக்கான டாலர்கள் தேவை. அது அவர்களால் இயலவில்லை. இது பெப்ஸிக்குத் தெரியும். அதனால்தான், விலை என்னும் மார்க்கெட்டிங் ஆயுதத்தைக் கோகோ கோலா மீது வீசினார்கள். பதிலடி கொடுக்கமுடியாத கோகோ கோலாவின் விற்பனை சரியத் தொடங்கியது. கோலா யுத்தத்தில், பெப்ஸிக்கு முதல் வெற்றி.
இந்த யுத்தத்தில், எதிர்பாராத இடத்திலிருந்து கோகோ கோலாவுக்கு உதவி கிடைத்தது. அந்த உதவியைத் தந்தது, இரண்டாம் உலக மகா யுத்தம். போரினால், மூலப்பொருட்களின் விலைகள் உயர்ந்தன. பெப்ஸி விலையை அதிகமாக்கவேண்டிய கட்டாயம். கோகோ கோலா இழந்த மார்க்கெட்டைத் திரும்பப் பிடித்தது.
1930 களில், பொருளாதார வீழ்ச்சியால், குடும்பங்களைப் பெரிதாக்க அமெரிக்கர்கள் பயந் தார்கள். இந்தக் காலகட்டத்தில் 24 லட்சம் குழந்தைகளேபிறந்தன. முந்தைய வருடங்களைவிட இது மிகக் குறைவான எண்ணிக்கை.
1946. உலகப் போர் முடிந்தது. மக்கள் தொகை பெருகத் தொடங்கியது. 1940 இல் 32 லட்சம் பிறப்புகள்: 1954 முதல் 1965 வரை ஒவ்வொரு வருடமும், 40 லட்சம் குழந்தைகள். இதனால், 1946 1964 வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கு, குழந்தைகள் பெருகிய காலத்தவர்கள் (Baby Boomers) என்று பெயர் வைத்தார்கள்.
வியூகம்
அமெரிக்கப் பொருளாதாரம் மறுபடியும் வளர்ச்சிப் பாதையில். புதுப் புதுப் பொருட்கள் சந்தைக்கு வந்தன. பேபி பூமர்கள் வளரத் தொடங்கினார்கள். விரை வில், இவர்கள் அமெரிக்க மக்கள் தொகையின் பெரும்பாலானோ ராக இருப்பார்கள் என்று புள்ளி விவரங்கள் கணித்தன. இவர் களைக் குறிவைத்து, பெப்ஸி, தன் மார்க்கெட்டிங் வியூகங்களை வகுக்கத் தொடங்கியது.
1961. வந்தது பெப்ஸி விளம் பர முழக்கம். மனதால் நீங்கள் இளைஞரா, பெப்ஸி உங்களுக் காக (Now it’s Pepsi for those who think young). தொடர்ந்தது அடுத்த அஸ்திரம், துடிப்போடு வாருங்கள், உங்கள் தலைமுறை பெப்ஸி தலைமுறை (Come alive you’re the Pepsi generation).
இளைய தலைமுறையினர் குடிக்கவேண்டிய ஒரே பானம் பெப்ஸிதான் என்னும் பொசிஷனிங்கைப் பேபி பூமர்கள் மனதில் உருவாக்கி, அவர்களைக் கோகோ கோலாவிடமிருந்து விலக்கி, தனக்கு மட்டுமே பெப்ஸி சொந்தமாக்கிக்கொண்டது.
டாப்பு, டூப்பு…
கோகோ கோலா தன் விளம் பரங்களை மாற்றிப் பார்த்தது. பலனில்லை. நாங்கள்தாம் உண்மையான கோலா (Coke the real thing) என்னும் விளம்பரம் தொடங்கினார்கள். நாங்கதான் டாப்பு, மீதி எல்லாம் (குறிப்பாக, பெப்ஸி) டூப்பு என்னும் இந்தப் பாணி விளம்பரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. இந்தக் கருத்தை மக்களிடையே பரவவிட்டால் ஆபத்து, இதை விளம்பரத்தால் அல்ல, அறிவியல் சோதனைகளால் எதிர்கொண்டு, பெப்ஸியும் கோகோ கோலாவுக்கு நிகரான தரமும், சுவையும் நிறைந்த பானம் என்று நிரூபிக்கப் பெப்ஸி முடிவெடுத்தது.
1975. பெப்ஸி கையில் எடுத்த ஆயுதம் பெப்ஸி சவால் (Pepsi Challenge). மார்க்கெட்டிங்கில் அடிக்கடி பயன்படுத்தப்படும், அறிவியலும், மனோதத்துவமும் சேர்ந்த சோதனை முறை. நாம், பெரும்பாலான பொருட்களை, அறிவு பூர்வமாகச் சிந்தித்து வாங்குவதில்லை, உணர்ச்சி பூர்வமாக வாங்குகிறோம். பெப்ஸி சவால், இந்த அடிப்படையில் அமைந்தது.
பெப்ஸி கம்பெனி, ஆயிரக் கணக்கான பொதுமக்களைத் தேர்ந்தெடுத்தார்கள். இவர்களுள், பெப்ஸி ரசிகர்கள், கோகோ கோலா விரும்பிகள், இரண்டுமே பிடிக்காதவர்கள் எனப் பலதரப் பட்டோர் அடக்கம். இவர்கள் முன் னால், இரு பானங்களும் கோப் பைகளில் ஊற்றி வைக்கப்பட்டன. எது பெப்ஸி, எது கோகோ கோலா என்று அவர்களிடம் சொல்ல வில்லை. எந்தச் சுவை அவர் களுக்குப் பிடித்தது என்று தெரிவிக்கச் சொன்னார்கள்.
பெப்சி சுவை
பெரும்பாலான மக்கள், அதிலும் குறிப்பாக, இளைஞர், இளைஞிகள், கோகோ கோலா சுவையைவிடப் பெப்ஸி சுவையை அதிகமாக விரும்பினார்கள். பெப்ஸிக்கு இது மாபெரும் வெற்றி. இந்த முடிவுகளைப் பெருமளவில் விளம்பரப்படுத்தியது.
இன்று, நீ பெரியவனா, நான் பெரியவனா என்று கோகோ கோலாவுக்கும், பெப்ஸிக்கும் உலகம் முழுக்கப் போட்டி தொடர்கிறது. 1863 முதல் 1960 வரை தொடர் தோல்விகள் கண்ட பெப்ஸி, கோகோ கோலாவுக்கு சமமாக வளர்ந்ததற்குக் காரணம், இளைய தலைமுறையின் தரமான, சுவையான குளிர்பானம் என்று 1961- இல் அவர்கள் உருவாக்கிய பொசிஷனிங்!

நன்றி தி இந்து..

எந்த முதளாளியும் நல்ல வழியில் சம்பாதிக்கவில்லை என்பதற்க்கு இது ஒரு சான்று...

..................ஆசிரியர் குழு....

திங்கள், 20 அக்டோபர், 2014

நமது நீரை உறிஞ்சி காய்க்கும்
 கோக்,
 பெப்சி,
 கின்லே,
 அக்வாஃபினா